கனடாவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை !

user 14-Feb-2025 சர்வதேசம் 147 Views

கனடா- ரொறன்ரோவிலுள்ள (Toronto) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொறன்ரோ பிராந்தியத்தில் பாரியளவு பனிப்பொழிவும், பனிப்புயல் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பன இவ்வாறு மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ, பீல், ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில்டன் நயகரா, மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாகவும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக பல்வேறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே வாகனங்களை மெதுவாக செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி