வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்து நாடு கடத்தி சிறையில் அடைத்துள்ளமை குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எமது படையினர் மதுரோவை சிறைபிடிக்கும் காட்சியை தான் நேரலையில் பார்த்தேன். எமது படையினரின் திறமை மெச்சிப் பாராட்டத்தக்கவை. அவர்களை பாராட்டுகிறேன்
வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் சீரழிந்து விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்கும்.சேதமடைந்த எண்ணெய் கைத்தொழிற்துறையை புதுப்பிக்க பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் நியமிக்கப்படும்.
வெனிசுலா 303 பில்லியன் பீப்பாய்கள் மதிப்புள்ள மசகு எண்ணெயைக் கொண்டிருக்கிறது. இது உலகளாவிய எண்ணெய் இருப்புக்களில் ஐந்தில் ஒரு பங்கு என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த எண்ணெய் நாட்டின் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வெனிசுலாவில் கதவுகள் திறக்கப்படுகின்றன. சி.என்.என்