சென்னை(Csk) அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராக சூர்யகுமார் யாதவ்(Suryakumar yadav) செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் 10 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு செம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் ரோயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கின்றது.
இந்தவகையில், சென்னை அணி 23ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிதலைவராக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை அணி தலைவர் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சூர்யகுமார் யாதவ் அணி தலைவராக செயல்படவுள்ளார்.
கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.