மாவை சேனாதிராஜா பெரும் தலைவர் !

user 30-Dec-2024 இலங்கை 929 Views

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில்தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தாலும் கூட முதலாவதாக தலைவர் விடயம் குறித்து பேசப்பட்டது. இதன்போது அடுத்த மாநாடு கூடுகின்ற வரைக்கும் இருக்கின்ற இடைக்காலத்தில் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் பணியாற்றுவார் எனவும் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் அரசியல் குழுத் தலைவராகவும் செயற்பாடுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, மாவை சேனாதிராஜா ஒரு பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டது. அரசியல் யாப்புக்களுக்கு அப்பாற்பட்ட பதவிகளில் இருப்பது அர்த்தமில்லை எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related Post

பிரபலமான செய்தி