மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மகேந்திரனுக்கு பிடியாணை !

user 27-Nov-2024 இலங்கை 59 Views

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை 2025 பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்தல் அனுப்பியுள்ளது.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும், ஊழல் வழக்கு தொடர்பிலேயே கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்யுமாறு, மூன்று நீதிபதிகளை கொண்ட கொழும்பு நிரந்தர ட்ரயல்-அட்-பார் அமர்வு, இன்டர்போல் மூலம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், அவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதன் மூலம் நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தவிர்த்து வருகிறார்.  

Related Post

பிரபலமான செய்தி