நியூஸிலாந்தின் கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் !

user 03-Dec-2024 சர்வதேசம் 1570 Views

நியூஸிலாந்தின் (New Zeland) தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. 

Ktago பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற கோழி பண்ணையில் ui7N6 துணை வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து அரசாங்கம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது உலகளவில், மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், கோழிப் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்று நியூஸிலாந்தின் உயிரியல் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நன்கு சமைத்த முட்டை மற்றும் கோழிப் பொருட்களை உட்கொள்வது பாதுகாப்பானது என்று அது கூறியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில், நாட்டுக்கான கோழி இறைச்சி உட்பட்ட பொருட்கள் தாய்லாந்து, பிரேசில், சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீன தாய்பே ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  

 

 

Related Post

பிரபலமான செய்தி