அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க ஆலை உரிமையாளர்கள் இணக்கம் !

user 05-Dec-2024 இலங்கை 1563 Views

கட்டுப்பாட்டு விலையில், ‘லங்கா சதொச’ மூலம் தினமும் 200,000 கிலோகிராம் அரிசியை சந்தைக்கு வழங்க அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போது வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ( Wasantha Samarasinghe) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நுகர்வோர் அரிசியை 220 ரூபாய் விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சமரசிங்க தெரிவித்துள்ளார் 

ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ​​வங்கிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆலைகளில் உள்ள அரிசியை சந்தைக்கு வெளியிட முடியாதுள்ளதாக என அவர்கள் கூறினர்.

இதனையடுத்து அந்த பிரச்சினைக்கான தீர்வை, அரசாங்கம்  வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு மில்லியன் தேங்காய்கள் 130 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி