வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை போராட்டமானது 3000ஆவது நாளை அடைந்துள்ள நிலையில், போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது, நேற்று (24.02.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு அருகில் 3000 நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக குறித்த போராட்டமானது, முன்னெடுக்கப்பட்டுள்ளது.