மலையகத்திற்கு பெருமை சேர்த்த விக்னராஜ் வக்சான்..

user 25-Jun-2025 இலங்கை 58 Views

மலையகத்தின் தலவாகலைப் பகுதியைச்  சேர்ந்த விக்னராஜ் வக்சான் சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டியில், இலங்கை தடகள வீரர் விக்னராஜ் வாக்சன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று 15 நிமிடங்கள் 56 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார். வக்சானுக்கு இப்போட்டித் தொடரில் கிடைத்த இரண்டாவது பதக்கம் ஆகும். போட்டி ஆரம்பித்த முதல் நாளில் நடைபெற்ற 1,500 மீட்டர் ஓட்டத்தில், அவர் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

[YOY3B ]

வக்சான் இதற்கு முன்னர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி ஆசியப் பகுதியைச் சேர்ந்த பல நாடுகள் பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது.

இதுவரை போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இதேவளை, ருசிரு சதுரங்க வீரர், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே அவர் 1,500 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவி நிமலி லியனாராச்சி, பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று பிரகாசித்தார். அவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் பெற்றிருந்தார்.

மேலும், குறுகிய தூர ஓட்ட வீரர் அயோமல் அகலங்க, 400 மீட்டர் தடைகளை உடைய ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்று இலங்கையின் பதக்க பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துள்ளார்.

இலங்கை அணிக்காக 8 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றனர். போட்டி இன்று முடிவடைகிறது.  

 

Related Post

பிரபலமான செய்தி