வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெறுவோருக்கு

user 05-May-2025 இலங்கை 346 Views

மேல் மாகாணத்தில், வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை பெற மே 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளை இறுதி நாளாக வழங்கப்பட்டுள்ளவர்கள், பிறிதொரு நாளில் வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, உள்ளுராட்சி தேர்தலுக்குப் பின்னர், பணிகள் தொடங்கும் முதல் நாளில், அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தி வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நாளை 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலின்போது தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல்.தம்மிக கே. விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி