மன்னாரில் இடம் பெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம்

user 01-Jun-2025 இலங்கை 147 Views

சட்ட ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் இலவச சட்ட ஆலோசனை முகாம்  ரைட்டு லைப் நிறுவனம் ஏற்பாட்டில்  இன்று  (31) கட்டையடம்பன் பகுதியில் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் மாதாந்த இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி திட்டம் கீழ் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பொது மக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை மற்றும் சட்ட உதவிகள் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளான சுதர்சனா மற்றும் ஜப்சன் பீரிஸ் ஆகியோரினால் வழங்கப்பட்டது.

 

இந்த ஆலோசனை முகாமில் சட்டத்தரணிகள் உட்பட மன்னார் மாவட்ட முதலுதவி மையத்தின் மாவட்ட இணைப்பாளர் டிலக்சன் மற்றும் இணை செயல் பாட்டாளர்களான விஜிதன்,டிலோஜன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி திட்டமானது மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை வருடமாக மன்னார் மாவட்ட முதலுதவி மையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்று வருகிறது.

குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஏற்கனவே சட்ட ஆலோசனை பெற்ற பலர் தங்களுக்கான வழக்குகளில் இருந்து தீர்வுகளைப் பெற்றுக் கொண்டதுடன் தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரியான முறையில் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி