மஸ்கெலியாவில் மண்சரிவில் புதையுண்ட ஐவர் மீட்பு

user 06-Aug-2025 இலங்கை 139 Views

மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது.

இன்று புதன்கிழமை (06) மதியம் 12:00 மணியளவில் அந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

Related Post

பிரபலமான செய்தி