இந்தியாவில் மணிப்பூரில் மீண்டும் வன்முறைகள் !

user 19-Nov-2024 இந்தியா 167 Views

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், பெரும்பான்மையான மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு செயற்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் சிறுபான்மை குக்கி குழுவைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டதாக இந்த 6 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக மெய்தி குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

எனினும், இதனை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை. கடந்த வார இறுதியில் மீண்டும் ஆரம்பமான வன்முறைகள் காரணமாக, மாநிலத்தின் சில பகுதிகளில் இணைய சேவைகளை முடக்க அதிகாரிகளை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் இரு இனக்குழுவினரும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இதுவரை 200 பேர் வரை பலியாகி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று, வன்முறையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை சூறையாடி அவற்றுக்கு எரியூட்டினர். கலவரத்தை அடுத்து, மத்திய அரசு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

2024 நவம்பர் 7ஆம் திகதியன்று மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்ததை அடுத்து மீண்டும் வன்முறைகள் ஆரம்பித்தன.

இதன்போது, மெய்தி அகதிகள் தங்கியிருந்த நிலையம் மற்றும் நிவாரண முகாம் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு குக்கி குழுக்கள் தான் காரணம் என்று பெரும்பான்மை சமூகம் குற்றம் சாட்டியது மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கில் மெயதீஸ் இனத்தினர் வாழ்கின்றனர். அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் குக்கிகள் வாழ்கின்றனர்.  

 

 

 

Related Post

பிரபலமான செய்தி