தமிழ் தேசிய அரசியலில் தற்போது ஒரு தலைமைக்கான வெற்றிடம் நிலவுவதை அனைவரும் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது அண்மையில் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவிற்குப் பின்னர் தலைமைத்துவம் இல்லாத தமிழ் தேசியத்தின் நிலை என்ன என்பது பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் அந்த பயமும் உருவாகியுள்ளது.
ஏற்கனவே தமிழ் கட்சிகள் அனைத்தும் உடைந்து சுக்குநூறாகியுள்ளது. கட்சிக்குள் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்தி அதனை சிதைத்துவிட்டனர் .
கட்சிக்குள் எத்தனையோ பிரச்சனைகள் ! தீர்மானம் எடுப்பதில் குழப்ப நிலை! சில பிரச்சினைகள் நீதிமன்றம் வரை சென்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் யார் குற்றவாளிகள் என்பது இன்னும் அறியப்படவில்லை அவ்வாறு அறியப்படும் எனில் இவர்கள்தான் தமிழ் தேசியத்தின் அரியணையை அலங்கரிக்க தகுதியானவர்களா?
கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் அல்லது தனிநபர் ஒழுக்க கேடுகளை மிகச் சரியாக கையாளாமல் சரியான பொருத்தமான தீர்மானங்கள் எடுக்காததன் விளைவு இன்றைய உடைபடுதலுக்கு காரணமாகும்.
மீண்டும் இவர்கள் ஒன்றிணைந்து கட்சியினை கட்டி எழுப்பி தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைவது என்பது சாத்தியமற்ற விடயம் என்றே தோன்றுகிறது.!