ஹட்டனில் விபத்து; மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில்

user 12-Sep-2025 இலங்கை 29 Views

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த காருடன் மோதிய விபத்தில் பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று (12) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம் காருடன் மோதியதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண் நோர்வூட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு குழந்தையைத் தவிர மற்ற ஆறு பேர் சிகிச்சை பெற்ற பின்னர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி