அமெரிக்காவின்(USA) இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கல்வித்துறையை ஆய்வு செய்யுமாறு எலான் மஸ்க்கிடம் கூறுவேன். அதன்பிறகு, இராணுவத்தில் ஆய்வு செய்ய சொல்வேன்.
பென்டகனில் நடந்த பல நூறு மில்லியன் டொலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு, எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசின் ரகசியங்களை எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.