கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல தற்போது மூத்த அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தீர்மானிக்கப்பட்டு விட்டது. தற்போது இது எதற்காக என்பது மக்களின் கேள்வி மூத்த கட்சி என்று அடையாளத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு தாயகத்தை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் இனி பதவி பெற்றுக்கொண்டு என்னவெல்லாம் செய்ய உள்ளனரோ என்று புலம்பி வருகின்றனர்.
எப்போதுமே தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேசத்தை ஈர்க்கும் வகையிலோ அல்லது தென்னிலங்கையின் கவனத்தை ஈர்ப்பது வகையிலோ ஆக்கபூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுத்ததாக வரலாறு இல்லை . தமிழ் அரசியல் கட்சிகள் என்ற விம்பம் அனைத்துமே உடைந்து சுக்குநூறாகிய நிலையில் இவர்கள் இன்று மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர். தற்போது எப்படியாவது சர்வதேச அரங்கில் தங்கள் பெயரை பறைசாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு விகாரையை வைத்து தங்கள் அரசியல் ஆட்டத்தை தமிழரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இதில் முழுமையாக மக்களை இனவாத ரீதியாக வழிநடத்தி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள எத்தனிக்கின்றன.
ஒரு பக்கம் எமது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் எமது மீனவர்கள் அன்றாட பொருளாதார வாழ்வு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகின்றது. எமது மீன் வளங்கள் சூறையாடப்படுகின்றன.எமது மீனவர்கள் தாக்கப்பட்டு எமது மீனவர்களின் வலைகளும் சேதமாக்கப்படுகின்றன. தினந் தோறும் அனைத்து ஊடகங்களிலும் எமது மீனவர் படும் துயரங்கள் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது கட்டாயமாக தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாகும். கடந்த வாரத்தில் கூட இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையானது தென்னாசியப் பிராந்தியத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் நேற்றைய தினம் தாயக தமிழ் அரசியல் தலைமை ஒருவர் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து விட்டதாவும் அதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதனைக் கூறுபவர்கள் சற்று சிந்தித்து கூறவேண்டும் ஏனெனில் தாயகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் பலவற்றிற்கு மூல காரணமாக அல்லது மறைமுகப் பின்னணியில் இருப்பது தமிழ் அரசியல்வாதிகளே ! எடுத்துக்காட்டாக சட்ட விரோத மணல் அகழ்வு மற்றும் போதை பொருள் வியாபாரம் போன்றவற்றில் முக்கிய அரசியல் தலைமைகளும் பங்கு வகிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தாயக தமிழ் அரசியல்வாதிகள் மீது இருக்கும் வழக்குகளை விசாரிக்க வேண்டுமெனில் தனியாக நீதிமன்ற அமர்வு நடத்தவேண்டும். இவர்கள் இதனைப் பேசும்போது தான் வேடிக்கையாக உள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனும் திரைப்பட பாடல் வரி எமது தமிழ் அரசியல் தலைமைகளுக்கே பொருந்தும்.
உண்மையில் இப்போது தாயக மக்கள் தெளிவான சிந்தனையில் தான் இருக்கின்றார்கள். எத்தனை தலைமைகள் மாறினாலும் தாயகத்தின் தலையெழுத்து மாறப்போவதில்லை. மாற்றம் ஒன்று வேண்டுமெனில் முதலில் எம்மில் இருந்தே தொடங்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளை நம்பி களமிறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமானதாகும்.