தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி

user 24-Apr-2025 இந்தியா 265 Views

 இந்தியா - ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் , தொலைபேசியை பறித்த ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்த மாணவி, தொலைபேசியை திருப்பித் தராவிட்டால் அடிப்பேன் என மிரட்டி, பின்னர் செருப்பால் தாக்கியுள்ளார்.

இந்த செயலுக்கு கல்லூரி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்து மாணவி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆசியையை மாணவி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Related Post

பிரபலமான செய்தி