யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

user 04-Jun-2025 இலங்கை 178 Views

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அரியாலை பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வரும் நபர் மீது நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல் அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவரை , அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 

Related Post

பிரபலமான செய்தி