வெளிநாட்டு ஆசை காட்டி 150 பேரை ஏமாற்றிய நபர்...

user 25-Jun-2025 இலங்கை 59 Views

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர் நேற்று மாலை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் போது, ​​சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையை சேர்ந்த 37 வயதுடையவராகும். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி