நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி !

user 14-Nov-2024 விளையாட்டு 305 Views

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

டக்வர்த்த என்ட் லுயிஸ் முறையில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் குசல் மெண்டிஸ் 143 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேகொப் டெபி 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டிக்கு மழை குறுக்கீடு செய்த காரணத்தினால் 27 ஓவர்களில் 221ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 175 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் வில் யங் 48 ஓட்டங்களையும் ரிம் ரொபின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மதீச பத்திரண மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி