தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்!

user 02-Jun-2025 இலங்கை 217 Views

இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.

வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையர் நாயகம் பி.கே.எஸ். சாந்த தெரிவித்தார்.

இதற்கிடையில், 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள  இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யு.டி.என். ஜயவீர தெரிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி